தமிழில் மைனா என்றபடத்தின் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் கவனிக்க தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை அமலாபால்.
இவர் இந்த படத்திற்கு பிறகு தமிழில் நிறைய படவாய்ப்புகள் வந்தன. தொடர்ந்து ஆர்யா, ஜெயம் ரவி, விஜய், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் இவர் ஜோடி சேர்ந்து நடித்தார். அதன் பிறகு இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில காரணங்களால் விவாகரத்தும் செய்தார்.
அதன் பிறகும் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வரும் இவர் தமிழ் மட்டும் அல்லாது, தெலுங்கு ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் மும்பை பாடகர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் தலைகீழாக நிற்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.