தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளவர் அமலாபால். இவர் ஹரிஷ் கல்யாண் நடித்த சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானர். முதல் படத்திலேயே சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் எதிர்மறையான எண்ணங்களை பெற்றார் அமலாபால். அதன் பிறகு இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது இயக்குனர் பிரபுசாலமன் இயக்கிய மைனா படம் .

இந்த படத்திற்கு பிறகு இவருக்கு குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் வர ஆரம்பித்தன. தொடர்ந்து தனுஷ், விஜய், விஷால் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார் அமலா பால். இயக்குனர் விஜயை காதலித்து இவரின் பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு மனக்கசப்பு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். திருமண விவாகரத்திற்கு பிறகும் அமலாபால் தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவர் குறித்து பல சர்ச்சைகள் எழுந்த நிலையிலும் அதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தன் வேலையை பார்த்து வரும் அமலாபால், தற்போது மிகவும் மோசமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து வரும் அமலாபால் கையில் மது பாட்டிலில் வைத்துக் கொள்வது போலவும் அதை குடிப்பது போலவும் ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் காசுக்காக இப்படி எல்லாமா செய்வீர்கள் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.














