தமிழில் கலாச்சாரத்தை மீறிய படமாக கருதப்படும் சிந்துசமவெளி படம் மூலம் அறிமுகம் ஆனவர் அமலாபால். இந்த படம் அமலாபாலுக்கு சற்று கெட்ட பெயரை வாங்கி தந்தது. அதன் பிறகு இவர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடித்த மைனா படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இந்த படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்கள் இவரை தூக்கி கொண்டாட ஆரம்பித்தனர். தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகர்களோடு இவர் ஜோடி சேர்ந்து நடிக்க தொடங்கினர். அதன் பின் இவர் தலைவா படத்தில் நடிக்கும் போதும் இவருக்கும் இயக்குனர் விஜய்க்கும் காதல் ஏற்பட்டு அது திருமணம் வரை சென்றது. அனால் இவர் திருமண வாழ்க்கை சில காலங்களிலே விவாகத்தில் முடிவு பெற்றது.
அதன் பின் அமலாபால் பற்றி பல சர்ச்சை கருத்துக்கள் வந்தவண்ணம் உள்ளன. இருப்பினும் அமலாபால் தொடர்ந்து சினிமாவில் நீடித்து வருகிறார். தற்போது மும்பை சேர்ந்த பாடகர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.இந்நிலையில் அமலாபால் தனுசுடன் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர் ஒருவருக்கு கட்டி பிடித்து முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகிறது.
இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் செம கலாய் கலாய்த்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ.