இந்திய திரை உலகின் மிகப்பெரிய நடிகர் பட்டியலில் முதலிடம் வகிப்பவர் நடிகர் அமிதாப்பச்சன். இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர். இவருக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லை என்று செய்திகள் வந்தன.
இந்நிலையில் இவருக்கு தொற்று உள்ளதா என டெஸ்ட் செய்யப்பட்டு உள்ளது. அதை தொடர்ந்து தற்போது கொரானா உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது, என சமூக வலைதளப் பக்கத்தில் அமிதாப்பச்சன் அறிவித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து இவருடன் கடந்த 15 நாட்களுக்கு மேல் தொடர்பில் இருந்தவர்களில் டெஸ்ட் செய்ய அறிவுறுத்தி இருந்தார். இதனிடையே அவரின் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு டெஸ்ட் செய்யப்பட்டது. இவரது மகன் மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
மேலும் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயா பச்சனின் டெஸ்ட் முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.