ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு ஏதுமின்றி பலர் நடிகைகள் வீட்டில் உள்ளனர். அவர்கள் வீட்டில் அன்றாடம் செய்யும் உடற்பயிற்சியை சமையல் போன்ற விளையாட்டுகளை இன்ஸ்டாகிராமில் வீடியோவாகவும் புகைப்படமாகவும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சித்தார்த் மற்றும் சந்தானம் நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். இந்த படத்திற்கு பிறகு இவர் ஆப்பிள் பெண்ணே என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். முதல் படம் இவருக்கு இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுக்கவில்லை என்றாலும் அடுத்து சிவாவுடன் நடித்த தமிழ் படம் 2 என்ற படம் நல்லதொரு வரவேற்பை தமிழ் சினிமாவில் பெற்றுத்தந்தது.

அதன்பிறகு இவர் இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஹிப்ஹாப் ஆதி உடன் நான் சிரித்தால் என்ற படத்தில் நடித்தார். இந்தப் பட வெற்றியைத் தொடர்ந்து பலரும் இவரை கவனிக்க ஆரம்பித்துள்ளனர். புகைப்படங்களை இன்ஸ்டால் அள்ளி தெளித்த இவர் தற்போது வீட்டில் தன் நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த நாய் இவரை விட உயரமாக இருப்பது என்பது தான் அதில் ஹைலைட் . இதோ அந்த வீடியோ