ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் ஐஸ்வர்யா மேனன். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ஆப்பிள் பெண்ணே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு சித்தார்த் நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல பெயரை பெற்றார்.
இதன் பிறகு இவருக்கு முக்கிய படமாக அமைந்தது தமிழ் படம் பாகம்-2. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இவருக்கு கதாநாயகி அந்தஸ்து தானாகவே கிடைத்தது. இந்நிலையில் ஹிப் ஆப் ஆதிக்கு ஜோடியாக நான் சிரித்தால் என்ற படத்திலும் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் தந்தது.
இந்நிலையில் லாக்டோன் காலத்தில் வீட்டில் பொழுதை கழித்து வரும் ஐஸ்வர்யா மேனன்,இன்ஸ்டாகிராமில் விதவிதமான போஸ்களில் அள்ளித் தெளித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் நடித்த காட்சி மீம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஓடும் பேருந்து நிறுத்த சொல்லி ஓட்டுநரை மிகவும் கேவலமான வார்த்தைகளால் திட்டும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.