விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை அபிராமி. இவர் இதற்கு முன்பு நிறைய படங்களில் நடித்து இருந்தாலும் விருமாண்டி படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
மேலும் இவர் இயக்குனர் கௌதவ் வாசுதேவ் மேனனை காதலித்ததாகவும், பின் இருவரும் பிரிந்து விட்டனர் என்றும் ஒரு வதந்தி உள்ளது.
இந்நிலையில் அபிராமி உடல் எடை ஏறியதால் பல வருடங்கள் பட வாய்ப்பில்லாமல் இருந்தார். மேலும் பட வாய்ப்பில்லாமல் இருந்த காலத்தில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் பழைய அழகிற்கு மாறியுள்ள அபிராமி உடல் எடை மிகவும் மெலிந்து காணப்படுகிறார். இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் இவர் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் உலா வருகின்றது.