தமிழில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப் ஆப் ஆதி இயக்கி நடித்த மீசையமுறுக்கு படத்தின் மூலம் அறிமுகமானவர். நடிகை ஆத்மிகா இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் இந்த முதல் படமே இவருக்கு நிறைய படவாய்ப்புகளை தமிழ் சினிமாவில் பெற்றுத்தந்தன. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆத்மிகா துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசுரன் படத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் நடித்து வருகிறார்.
இவருக்கு பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை இருப்பினும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே இணைப்பில் இருக்கிறார் ஆத்மிகா.
இந்நிலையில் இவரது தந்தை ஜூன் 26ஆம் தேதி இறந்து உள்ளார். அவர் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார்.அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கண்ணீருடன் பதிவு செய்துள்ளார் ஆத்மிகா.