நாளுக்கு நாள் கொரானோ தாக்கம் அதிகரித்து வருவதால் எப்படி இதை தடுப்பது என உலக நாடுகள் அனைத்தும் திணறி வருகிறது. இந்நிலையில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதுதான் இதை தடுக்க ஒரே வழி.
இதனால் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்திய முழுவதும் ஊரடங்கு உத்தரவை வழங்கியுள்ளது. இதனால் திரை துறையை சேர்ந்த ஆயிரக்கணக்கோனோர் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
இதனால் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் நடிகைகள் கொஞ்சம் உதவினால் நன்றாக இருக்கும் என அந்த அமைப்பின் தலைவர் ஆர். கே. செல்வமணி கோரிக்கை விடுத்தது இருந்தார்.
இதை அடுத்து பிரபலங்கள் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் யோகி பாபு நடிகர் சங்க ஊழியர்களுக்கு அரிசி மூட்டைகளை நேராகவே கொண்டுபோய் கொடுத்துள்ளார். இதன் புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது.