தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் பல ஹிட் படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார். செல்லமே படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து இவருக்கு சண்டக்கோழி, திமிரு என தொடர் வெற்றிப் படங்கள் அமைந்த. ன மிகவும் புகழின் உச்சத்திற்கு நடிகர் விஷால் சென்றார், ஆனால் சில படங்களில் சினிமா பயணத்தை பின்னுக்கு தள்ளின. மீண்டும் தனது பழைய இடத்தை பிடிக்க தொடர்ந்து விஷால் முயற்சி செய்து வருகிறார்.
இவர் தமிழில் நான் சிகப்பு மனிதன், ஆக்சன், துப்பறிவாளன், இரும்புத்திரை போன்ற படங்களில் நடித்துள்ளா. ர் இவர் நடிப்பில் தற்போது சக்ரா என்ற படம் வெளிவர உள்ளது. இதனை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இவர் கம்பெனியில் வேலை பார்த்த பெண் ஒருவர் விஷாலிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை திருடி ஒரு வீடு வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
அந்தப் பெண்மணி விஷாலிடம் இருந்து கிட்டத்தட்ட 45 லட்சம் வரை திருடி உள்ளார் என்று கூறப்படுகின்றது. இந்த வேலையை இவர் 6 வருடமாக பார்த்து வந்துள்ளார். இதுகுறித்து போலீசாரிடம் புகார் அறிவிக்க போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.