நடிப்பிற்காக எந்த சிரமத்தியும் பொருட்படுத்தாமல் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் நடிகர் விக்ரம். இவரை பார்த்து பல நடிகர்கள் கதாபாத்திர மாற்றத்திற்கு உழைத்து வருகின்றனர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனிற்கு பிறகு இவர் தான் நடிப்பில் சிறந்தவர் என பேசும் அளவிற்கு இவர் நடிப்பு இருக்கும்.
பல சிரமங்களுக்கு பிறகு இவர் நடித்து சேது படத்தின் மூலம் வெற்றி பெற்ற இவர் தொடர்ந்து தூள், சாமி போன்ற வெற்றி படங்களில் நடித்து வந்தார். இவருக்கும் நடிகர் ரஜினி போல ரசிகர் கூட்டமும் ஏறிக்கொண்டே போனது . தொடர்ந்து வெற்றி பெற்று வந்த இவர் தற்போது சற்று தாழ்ந்து போய் உள்ளார்.
இதற்கு காரணம் இவர் நடிப்பில் வெளிவந்த பீமா படம் தான் , இந்த படம் தான் இவரின் சினிமா மார்க்கெட்டை சற்று சறுக்கியது. அதன் பின் இவர் பழைய இடத்தை இன்னும் பிடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.