தமிழில் உலக நாயகனுக்கு அடுத்து நடிப்பில் சிறந்தவர் என்றால் அது விக்ரம் தான். இந்த விக்ரம் தனது ஒரு படத்திற்காக எந்த ஒரு கஷ்டத்தையும் அவர் சாதாரணமாக எதிர்கொள்வார். உடலை வருத்திக்கொண்டு இவர் ஒவ்வொரு படத்திலும் அந்த கதாபாத்திரமாகவே நடிப்பார். அந்த வகையில் தற்போது விக்ரம் நடித்து வெளிவர இருக்கும் படம் கோப்ரா. இதில் பல விதமான கெட்டப்பில் விக்ரம் நடித்து அசத்தியிருக்கிறார். இது விக்ரமிற்கு 58வது திரைப்படம்.
இந்தப் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விக்ரம் ஏழு விதமான கெட்டப்பில் அசத்தியிருந்தார். அதுமட்டுமின்றி விக்ரம் இந்த படத்தில் 20 விதமான கெட்டப்புகளில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விக்ரம் ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக கோப்ரா படத்திலிருந்து தும்பி துள்ளல் பாடல் வெளியாக உள்ளது. இந்தப் பாடலை ஷ்ரேயா கோஷல் மற்றும் நகுல் அபயங்கர் இணைந்து பாடியுள்ளனர் ஜிதின் ராஜ் மற்றும் விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.
இந்த பாடலில் உள்ள சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் விக்ரம் மற்றும் ஸ்ரீ நிதி ஷெட்டி இருவரும் திருமணத்திற்கு தயாராகும் புகைப்படங்கள் உள்ளன.