Wednesday, July 17, 2024
-- Advertisement--

பழைய கெத்துடன் மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட விஜயகாந்த்…!!! ரீன்ட்ரிக்காக காத்திருக்கும் தொண்டர்கள்.

நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் என்று புகைப்படம் வெளியிட்டு விஜயகாந்த் ட்வீட் செய்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். கொரோனா காரணமாக உடல் பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல முடியாத நிலை விஜயகாந்த்துக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் விஜயகாந்த் கடந்த 30ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக துபாய் சென்றார். அவருடன் அவரது மகன் சண்முகப் பாண்டியன் உடன் சென்றார். தொடர்ந்து விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொருளாளரும் ஆன பிரேமலதா விஜயகாந்த் புறப்பட்டு சென்றார். இந்நிலையில் நேற்று காலை விஜயகாந்த் தனது புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த சத்ரியன் திரைப்படத்தை எனது சிகிச்சைக்கு உதவி செய்யும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த புகைப்படம் என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தில் விஜயகாந்த் பேண்ட், டீசர்ட், கண்ணாடி அணிந்து கால் மேல் கால் போட்டபடி அமர்ந்து இருக்கிறார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles