தமிழ் நடிகர்களின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் தமிழ்நாட்டில் அதிகம். நாளுக்கு நாள் இவரின் ரசிகர் படலத்தின் மாஸ் ஏறிக்கொண்டே போகிறது.
இவர் நடித்த படங்களில் ஏதாவது ஒரு தங்கை செண்டிமெண்ட் இருக்கும். திருப்பாச்சி, சிவகாசி போன்ற படங்களில் அதை நாம் அதிகம் பார்த்திருப்போம். இவரை தமிழ் பெண்கள் பலரும் செல்லமாக அண்ணா என்று தான் அழைப்பார்கள். இதை நாம் பல பேட்டியில் பார்த்திருப்போம்.
தற்போது விஜய் தன் தங்கை வித்யாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இவர் தங்கை சிறு வயதிலேயே உடல் நலம் சரி இல்லாமல் இறந்து விட்டார். தற்போது இவர் தங்கையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றது.










