Friday, September 11, 2026
-- Advertisement--

முதல் ஆளாக நகரப்புற தேர்தலில் வாக்களித்த நடிகர் விஜய்…!!! எளிமையாக வாக்குச்சாவடிக்கு வந்த விஜய்.

இன்று காலை நடிகர் விஜய் சென்னையில் உள்ள நீலாங்கரை வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றை 12 , 500க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன.

இந்த வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி உள்ளது.

தமிழக திரையுலகில் முதல் ஆளாக காலை வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.

நடிகர் விஜய் தமிழகத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் என அனைத்து கட்சி தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்து வருகிறார். இன்று காலை விஜய் மிகவும் எளிமையாக சிவப்பு நிற ஆல்டோ காரில் வாக்குச்சாவடிக்கு வந்தார்.

மேலும் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து உள்ள நிலையிலும் நேராக சென்று வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். மேலும் விஜய் மக்கள் இயக்கம் நகரப்புற தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles