தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தவர் விஜய் சேதுபதி. இவரை மக்கள் செல்வன் என்று தமிழக மக்கள் செல்லமாக அழைக்கின்றனர்.
இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே வெற்றி பெற்று வரும் தருவாயில் இவரது அடுத்த படமான துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்சேதுபதி வெளியிட்டு இருந்தார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சன் டிவியில் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகும் சேதுபதி சொன்னபடியே சன் டிவியின் ட்விட்டர் வெளியிட்டனர். விஜய் சேதுபதி ஒரு டேபிள் முன்பு அமைதியாக உட்கார்ந்திருக்கும் அவருடைய பிம்பம் சிரித்தபடி இருக்கும் வகையில் வித்தியாசமாக உள்ள இந்த போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகின்றது.
இந்த படத்தை டெல்லி பிரசாத் என்பவர் இயக்கியுள்ள விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்துள்ளார். இந்த படத்தில் பார்த்திபன், மஞ்சிமா மோகன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர், 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் வயோகன் ஸ்டுடியோஸ் நிதி நிறுவனங்கள் இணைந்து இந்தப்படத்தை தயாரித்து வருகின்றன. இந்த படத்திற்கு கோவிந்து வசந்தா இசையமைத்துள்ளார்.