தமிழ் சினிமாவின் மறுக்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள் சூர்யா ஜோதிகா. திருமணத்திற்கு பின்பு மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கும் ஜோதிகா சமீபத்தில் ஒரு மேடையில் கோயில்களை பற்றி பேசியது மிகவும் சர்ச்சைக்குள்ளானது.

இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் சோசியல் மீடியாவில் உருவான நிலையில், இதற்கு ஆதரவாக விஜய் சேதுபதி பேசியதாகவும் கருத்துக்கள் வெளிவந்தன. ஆனல் அது முற்றிலும் வதந்தி என விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருந்தார்.

இந்நிலையில் சூர்யா சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் அன்பை விதைப்போம் என்ற தலைப்பில் ஒரு கடிதம் எழுதி வெளியிட்டுள்ளார். இதற்கு விஜய்சேதுபதி சிறப்பு என கருத்து தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இவர் ஜோதிகா பேச்சிற்கு ஆதரவு தெரிவிப்பது உறுதியாகி உள்ளது.