தமிழ் சினிமாவை மட்டுமே நம்பி தன் வாழ்க்கையில் எட்டு வருடங்களாக முயற்சி செய்தவர் விஜய் சேதுபதி. அதன் பலனாக இவர் நடித்த முதல் படமே அவருக்கு தேசிய விருது பெற்றுத்தந்தது. அதன்பிறகு இவர் வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தும், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு கன்னடத்திலும், தெலுங்கிலும் நடிக்க பல வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. மேலும் இவரது சினிமா பயணம் பல புது கலைஞர்களின் சினிமா பயணத்திற்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது.
மிகவும் அடிமட்டத்தில் இருந்த விஜய்சேதுபதி தன்னைத்தானே உயர்த்தி தற்போது மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் விஜய்சேதுபதி வீடு ஒன்று வாங்கியுள்ளார். அதில் அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் சேர்த்து உள்ளார்.அந்த வீட்டில் டென்னிஸ் விளையாடுவதற்கு தனி மைதானம், திரையரங்குகளில் உள்ள ஸ்கிரீனை போலவே ஒரு மினி திரையரங்கம் மற்றும் வீட்டிலேயே அவர் படத்திற்கு டப்பிங் செய்ய ஒரு இடம் போன்ற பல வசதிகளை அந்த வீட்டில் அவர் அமைத்து உள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்



