தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படம் ஆரம்பித்ததில் இருந்தே பெரும் பிரச்சினைகளையும் சவால்களையும் சந்தித்து வருகிறார் விஜய்.
ஆரம்பத்தில் வருமானவரித்துறை ரெய்டு அதன்பின்னர் இசை வெளியீட்டு விழா பிரச்சினை என பல பிரச்சனைகளை சந்தித்து மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக மாஸ்டர் படம் கடந்த 2 மாதத்திற்கு மேல் ரிலீஸ் செய்யாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது .இந்நிலையில் இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் இப்படத்தின் தயாரிப்பாளரான லலித்குமார் மிகவும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகின்றது. இன்னும் மேலும் மூன்று மாதங்களுக்கு இவர் இந்த படத்திற்கான கடன் வட்டியை கட்டிவருவதாகவும்,இந்த வட்டி தொடரும் என்றும் தெரியவருகிறது. பல கோடி ரூபாய் வரை அவர் நஷ்டத்தை சந்தித்து உள்ளார் .இதனால் அவருக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் என்றும் கூறப்படுகின்றது.
இதை அறிந்த விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறியதாகவும், ஒரு படம் அவர் தயாரிப்பில் ஒப்பந்தம் செய்ததாகவும் கூறப்படுகின்றது. விஜய் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. அதற்கு அடுத்த படத்தை லலித் குமார் தயாரிப்பார் என்று கூறப்படுகிறது.