தமிழ்நாட்டில் உச்சநடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தன் அப்பா சந்திரசேகர் இயக்கிய நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் விஜய். இந்த படத்திற்கு பிறகு நிறைய தமிழ் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர்களையும், அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் வலம் வருகிறார்.
இவரை தமிழக மக்கள் செல்லமாக இளைய தளபதி என்று அழைக்க அதுவே அவரது பட்ட பெயராக மாறிவிட்டது. இந்தியாவில் உள்ள 100 முன்னணி பிரபலங்களில் நடிகர் விஜயும் ஒருவர் ஆவார். இதுவரை இவர் நடிப்பு திறனை பாராட்டி மூன்று முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதும், மேலும் பல விருதுகளும் இவர் பெற்றுள்ளார்.
தளபதி விஜய்க்கு இன்று ஜூன் 22 பிறந்தநாள். வருடா வருடம் இவரது ரசிகர்கள் இவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுவார்கள். இந்த வருடம் கொரானோ காரணமாக ரசிகர்களுக்கு விஜய் பிறந்தநாளை கொண்டாடவேண்டாம் என வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து விஜய் ரசிகர் மன்ற தலைவர் பூசி ஆனந்த் கொண்டாட்டங்கள் இல்லை என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஐ நடித்து வெளிவர உள்ள மாஸ்டர் படத்தின் மற்றுமொரு போஸ்டர் நேற்று நள்ளிரவு பிறந்தநாள் பரிசாக வெளியானது. இந்த போஸ்டரும் ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.