தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த படம் மாரி. இந்த படம் தனுஷின் வரலாற்றில் ஒரு மாசான படமாக கருதப்பட்டது. இந்த பட வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டது .இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய்பல்லவி ,வில்லனாக டோவினோ தோமஸ் என்ற மலையாள சினிமாவை சேர்ந்த நடிகர் நடித்து இருந்தார்.
தற்போது இந்த பட வில்லன் டோவினோ தோமஸ் மலையாள சினிமாவில் மின்னல் முரளி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் லோக்கல் ஏரியாவில் இருக்கும் சூப்பர்மேன் என்ற கதையை கொண்ட இப்படத்தை ஜோசப் என்பவர் இயக்கி வருகிறார். மின்னல் முரளி படத்தில் மற்ற படங்களைப் போலவே ஸ்டன்ட் காட்சிகள் கூடாது என்பதால் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் என்பவரை அழைத்து வந்துள்ளாராம். இப்படத்திற்காக கேரளாவில் காலடி என்கிற இடத்தில் மிகப்பெரிய சர்ச் செட் ஒன்றை அமைத்துள்ளனர். ஆனால் ஊரடங்கு காரணமாக 50 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடக்கவில்லை.
இதனால் அப்பகுதியை சேர்ந்த சில சமூக விரோதிகள் படப்பிடிப்பு செட்டை முற்றிலுமாக அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் படக்குழுவினர் போலீசில் புகார் அளித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளனர்.