மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ளவர் துல்கர் சல்மான். இவர் மலையத்தில் நடித்து வெளிவரவுள்ள படம் “வரனே அவசியமுண்ட” இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோ சமீபத்தில் வெளியானது. இதில் தன் வளர்ப்பு நாய்க்கு அவர் பிரபாகரன் என்று பெயரிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது.
இதற்கு தமிழர்கள் சார்பில் பெரும் எதிர்ப்பு வெளியானது. இந்நிலையில் இதற்கு மன்னிப்பு கோரியுள்ள துல்கர் சல்மான் “வரனே அவசியமுண்ட” படத்திலுள்ள பிரபாகரன் நகைச்சுவை காட்சி தமிழ் மக்களை இழிவு படுத்தும் வகையில் உள்ளதாக பலரும் கூறியது என் கவனத்திற்கு வந்ததை அடுத்து,
இந்த காட்சி எந்த உள்நோக்கத்துடனும் எடுக்கப்படவில்லை, இங்கே பிரபாகரன் என்ற பெயர் சாதாரண பெயர் தான், மேலும் படத்தில் தொடக்கத்தில் போடப்பட்ட அறிவிப்பின் படி அந்த பெயர் உயிருடன் உள்ள யாரையும் அல்லது மறைந்த யாரையும் குறிப்பிடவில்லை.
இந்த படத்தை பார்க்காமல் பலர் இதற்கு எதிர்வினையாக பேசுகிறாரகள். வெறுப்பை பரப்ப முயற்சி செய்கிறார்கள். என்னை வெறுப்பதோ அல்லது என்னுடைய இயக்குனர் அனுப்பை வெறுப்பதையோ நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
அதை எங்களுடன் நிறுத்திக்கொள்ளுங்கள். எங்கள் தந்தையை திட்டுவதோ அல்லது குடும்பத்தாரை திட்டுவதோ வேண்டாம். அந்த காட்சியால் காயம்பட்ட நல்ல மற்றும் அன்பான தமிழ் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.










