தற்போது பல திரைப்பிரபலங்கள் இளம் வயதிலேயே இறக்கின்றனர். இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சேது, ஆந்திராவில் சிரஞ்சீவி, தற்போது இந்தி பட உலகில் சுஷாந்த் சிங்.
பலர் நல்ல படங்களை இந்தி திரையுலகிற்கு கொடுத்தவர் இவர். மிகவும் நேர்மையானவர், அன்பானவர், பண்பானவர் என்று தன் சக நடிகர்கள் பாராட்டப்பட்ட நடிகர். மிகவும் கஷ்டப்பட்டு தானாகவே தன்னை உயர்த்திக் கொண்ட ஒரு போராளி.
குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு படங்கள் நடித்திருந்தாலும், இவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்து அந்த கதாபாத்திரமாகவே வாழும் குணமுடையவர். இந்நிலையில் இவர் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளிவந்த படத்தில் ஹீரோவாக நடித்தார்.

இந்த படம் இவரை உலக அளவில் புகழ் பெற செய்தது. இந்நிலையில் சுஷாந்த் சிங் நேற்று காலை மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டார். இவருக்கு வயது 34. இவருடைய மரண செய்தியை கேட்ட உடன் தந்தை உடல்நிலை மிகவும் மோசமாகி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
அவரது தாயார் லட்சுமி தேவி சுஷாந்த் சிங்கின் மரணச்செய்தி தொலைபேசி வாயிலாக தங்களுக்கு வந்தது. அவருடைய சகோதரி சண்டிகரில் இருந்து தற்போது அவர் இறந்த இல்லமான பாட்னா விற்கு வந்து கொண்டிருக்கிறார். சொந்த ஊரில் பல மக்கள் கூடியுள்ளனர்.
இதனிடையே சில நாட்களுக்கு முன்பு சுஷாந்த் சிங் தனது தந்தையிடம் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அதில் விரைவில் வந்து தங்களை மலைப் பகுதிக்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் மட்டும் தனியாக வேறு உலகிற்கு போவார் என்று எதிர்பார்க்கவில்லை, என்று அவர் கூறியுள்ளார். என்ன ஆயினும் தற்கொலை என்பது ஒரு பிரச்சனைக்கு தீர்வு அல்ல.