பாலிவுட் திரை உலகில் தற்போது சில மரணங்கள் நிகழ்ந்தன. அதில் சமீபத்தில் பிரபல இளம் நடிகரான சுஷாந்த் சிங் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டது சினிமா வட்டாரத்தில் உள்ளவர்களையும், சினிமா ரசிகர்களையும் மிகவும் அதிர்ச்சி அடைய செய்தது.
இந்நிலையில் இவர் இறப்பு குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. ஒரு இளம் நடிகர் துடிப்பான நடிகர் பணக்கஷ்டம் இல்லாத ஒருவர் யார் எதற்காக தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று பலர் இவர் மர்ம மரணம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இவர் மரணம் இன்று வரை புரியாத புதிராகவே இருந்துவரும் நிலையில் இவர் குறித்து பல சர்ச்சைகளும் இவர் இவரின் கதைகளும் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் சுஷாந்த் சிங் தன் தாய்க்கு எழுதிய கடிதம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அம்மா “நீங்கள் எப்போதும் என்னுடன் இருப்பீர்கள் என எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்தீர்கள்” நானும் என்ன ஆனாலும் சிரித்துக் கொண்டுதான் இருப்பேன் என சத்தியம் செய்தேன், ஆனால் இப்போது பார்த்தீர்களா நாம் இருவருமே செய்து கொடுத்த சத்தியத்தை மீறி விட்டோம், என எழுதியுள்ளார்.