கொரானோ ஊரடங்கு மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் மாறியுள்ளது. பிரபல நடிகர்கள் பட வாய்ப்பில்லாமல் பணத்திற்காக பல கூலி வேலை பார்த்து வரும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வருகின்றன. சமீபத்தில் நடிகர் சூரி ஊரடங்கு காலத்தில் வீட்டில் எவ்வாறு பொழுதைக் கழிக்க வேண்டும், குழந்தையுடன் எவ்வாறு நேரத்தை செலவழிக்க வேண்டும் என்று பலவற்றை தனது வீடியோ மூலம் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது சென்னையில் தொற்று மிகவும் அதிகமாகி உள்ளதால் அவர் தன் சொந்த கிராமத்திற்கு சென்று தன் சொந்த பந்தங்களோடு வாழ்ந்து பொழுதை கழித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூரி சொந்த ஊருக்கு சென்ற பிறகு கிராமம் சம்பந்தமான புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அது போல தற்போது தான் வளர்க்கும் கருப்பன் என்ற காளை மாட்டை கண்மாயில் குளிக்க வைப்பதற்காக கூட்டிச்செல்லும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் அதற்கு தன் டுவிட்டர் பக்கத்தில் ஊரடங்கு நடுவுல ஊரே அடங்கி நிற்கும் எங்க கருப்பன் நடந்து போனா என்று குறிப்பிட்டுள்ளார் இந்த பதிவிற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளித் தெளித்து வருகின்றனர் அந்த புகைப்படம்.