கொரானோ வைரஸ் நாடெங்கும் அதிவேகமாக பரவிவருகிறது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த இந்த வைரஸ் தற்போது உலகெங்கும் பல நாடுகளில் தலை விரித்து ஆடுகிறது. மேலும் இந்த வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகம் ஆகி கொண்டே வருவதால் இந்த வைரஸை ஒழிப்பதற்கான மருந்தை கண்டுபிடிக்க தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது.
இதனை தடுப்பதற்கு தற்போது உள்ள ஒரே வழி என உலகெங்கும் உள்ள நாடுகள் அனைத்தும் சமூக விலகலை கடைபிடிப்பதுதான் ஒரே வழி என கருதி மக்களை கடைபிடிக்க சொல்லிவருகிறது. மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவிலும் மக்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். பிரபலங்கள் பலரும் வீட்டில் எப்படி பொழுதை கழிக்கின்றனர் என்பதை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூரி தன் பிள்ளைகளோடு நேரத்தை எவ்வாறு போக்குகிறார் என்பதை தினம் வீடியோவாக வெளியிட்டுவருகிறார். இந்த வீடியோக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதோ வீடியோ.