சூரி நடித்து சமீபத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் மாமன். மாமன் மருமகன் இடையே உள்ள அழகான உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். சூரியும் தனக்கு என்ன வருமோ அதை சரியாக செய்து வருகிறார்.
தற்பொழுது சூரி நடித்த விடுதலை, கருடன் என்று தொடர் வெற்றிகளை சந்தித்து வரும் சூரிக்கு இந்த மாமன் திரைப்படம் வெற்றி படமாக அமையுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் .

இந்நிலையில் மதுரையில் சூரியின் மீது கொண்ட அலாதி பிரியத்தால் அவரது திரைப்படம் பெரிய அளவில் ஹிட் ஆக வேண்டும் என்று ரசிகர்கள் சிலர் வேண்டுதல் செய்து மண் சோறு சாப்பிட்டு உள்ளார்கள். இந்த விஷயம் சூரி காதுக்கு செல்ல டென்ஷன் ஆன சூரி தம்பிகளா ரொம்ப முட்டாள்தனமான செயல் இது. என்ன இம்ப்ரெஸ் பண்ண படம் நல்ல ஓடானு இதெல்லாம் செய்யிறீங்க கதை நல்ல இருந்த தான் படம் ஓடும். இதை செய்றதுக்கு நாலு பேருக்கு சாப்பாடு போட்டு இருக்கெல்லாம் தம்பிகளா. மோர் வங்கி கொடுக்கலாம், போட்டு இருக்கெல்லாம் ஏன் தண்ணீர் கொடுத்தால் கூட சந்தோசப்பட்டு இருப்பேன்.
நான் உணவை ரொம்ப மதிக்கிறவன். ரொம்ப வேதனையா இருக்கு. நான் சாப்பாட்டுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துருக்கேன் எனக்கு தான் தெரியும். இப்படி செய்றவங்க என் ரசிகர்களே இல்லை என் தம்பிகளே இல்லை என்று வருத்தத்துடன் கூறி உள்ளார் சூரி.