Wednesday, April 24, 2024
-- Advertisement--

எந்த வெரைட்டி ரைஸ் எடுத்தாலும் 30 ரூபாய் தான்…!!! மதுரை அரசு மருத்துவமனையில் நடிகர் சூரியின் ஹோட்டல்..!!!

தமிழ் சினிமாவிற்கு காமெடியனாக அறிமுகம் ஆகி நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கிய சூரி தற்பொழுது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

இதுவரை மக்கள் தன்னை காமெடியனாக பார்த்து விட்டார்கள் இனி ஹீரோவாக பார்க்கப் போகிறார்கள் மக்கள் ஹீரோவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் கடினமான உழைப்பு தேவை என்று நன்கு புரிந்துகொண்ட சூரி முதல் முதலாக தான் ஹீரோவாக நடிக்கும் படத்தின் கதையை கவனமாக தேர்வு செய்யத் தொடங்கினார். அப்படி தேர்வு செய்யப்பட்டது தான் வெற்றிமாறன் அவர்களின் விடுதலை.

வெற்றிமாறன் அவர்களின் விடுதலை படத்தின் ஹீரோவாக நடித்து வருகிறார் சூரி. படத்தில் சூரிக்கு போலீஸ் கதாபாத்திரம் என்பதினால் ஜிம்முக்கு சென்று தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ள சூரி சூட்டிங் ஸ்பாட்டில் தண்டால் எடுத்துவிட்டு அதன் பின் சில காட்சிகளில் நடித்து வருகிறாராம்.

படு பிஸியாக இருக்கும் சூரி மதுரையில் அம்மன் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். சூரி பிஸியாக இருப்பதால் சூரி அவர்களின் சகோதரர் லட்சுமன் என்பவர் அம்மன் உணவகத்தை நடத்தி வருகிறார் நல்ல தரமான உணவை கொடுத்து மதுரை மக்களிடம் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது அம்மா உணவகம். சமீபத்தில் சூரியின் உணவகத்தில் உணவு சாப்பிட்ட நிதி அமைச்சர் PTR தியாகராஜன் அவர்கள் சூரியன் தம்பி அவர்களை கூப்பிட்டு இது போன்ற தரமான உணவை குறைந்த விலையில் மதுரை அரசு மருத்துவமனையில் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பின் சில மாதங்களில் மதுரை அரசு மருத்துவமனையில் சூரியின் அம்மன் கேன்டீன் தியாகராஜன் தலைமையில் திறக்கப்பட்டதும் கலந்து கொண்டார்.

பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய சூரி அம்மன் உணவகம் மதுரையில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறது. தரமான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு தரமான உணவை கொடுக்க வேண்டும் என்கின்ற போது தான் அம்மன் கேன்டீன் இன்று மதுரை அரசு மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ளது கண்டிப்பாக தரமான உணவை கொடுப்போம் என்று கூறியுள்ளார்.

புதிதாக துவங்கியுள்ள சூரியின் கேண்டீனில் எந்த ஒரு வெரைட்டி ரைஸ் அதாவது புளி சாதம் தயிர் சாதம் லெமன் சாதம் போன்ற எந்த ஒரு வெரைட்டி ரைஸ் எடுத்தாலும் 30 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாப்பாடு 60 ரூபாய்க்கு கொடுக்கிறார்கள்.

இதுபோன்ற தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் நல்ல கேன்டீன் அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles