தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ் சிவகார்த்திகேயன். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது தனுஷ்க்கு போட்டியாக நடிகராக வலம் வருகிறார்.
இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்கள் இருவரும் நடித்த வெளியான திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்ள போகிறது என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. அதே சமயம் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மின்னல் திரைப்படமும் வெளியாக உள்ளது.
இதனால் இரு படங்களும் தீபாவளி பண்டிகைக்கு மோத இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் நேருக்கு நேர் மோதுவதால் யார் படம் வெற்றி பெறப் போகிறது என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. விரைவில் இது குறித்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.