தமிழில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி அதன்பிறகு சினிமாவிற்குள் வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் சினிமாவில் நுழைந்த பிறகு வெற்றியில் நிலைத்திருப்பது என்பது மிகவும் கடினமான விஷயம்.

இந்த வெற்றிப் பாதையில் மிகவும் கவனமாகவும் நிதானத்துடனும் கடந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இவருடைய செயல்களும் இவர் சமூகத்திற்கு செய்யும் நலன்களும் மக்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்று கூறினார். அவர் குடிப்பதும் இல்லை சிகரெட் புகைப்பது மில்லை அவ்வாறு நண்பர்கள் என்னை கட்டாயப்படுத்தியதும் கிடையாது என்று அவர் கூறினார்.

இந்த செய்தியினை தற்போது நெல்லை போலீஸ் கமிஷனர் அர்ஜுன் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதுபோன்று நண்பர்கள் கிடைப்பது மிகவும் அதிசயம். அதாவது நட்சத்திரங்கள் சொல்வதை அப்படியே கேட்பவர்களா நீங்கள். அப்படி என்றால் இதனையும் கொஞ்சம் கேளுங்க. எந்த நண்பனும் குடிக்க என அழைக்க மாட்டான் அப்படி அழைப்பவர்கள் நட்பிலிருந்து வெளியேறுங்கள், அவன் உங்களை உலகில் இருந்து வெளியேற அழைக்கிறான்.. என்று பதிவு செய்துள்ளார்