தமிழ் திரையுலகில் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்று வெற்றி பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவர்.

இந்தி மற்றும் தமிழில் உருவான பிங்க் படத்தின் தெலுங்கு பதிப்பில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். அரசியலுக்கு போன பிறகு பவன் நடிக்கும் படம் என்பதால் மக்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

இதை அடுத்து அவர் வானம் இயக்குனர் கிரிஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. பல மொழி பிரபலங்கள் இதில் நடிக்க உள்ளனர். இந்நிலையில் தமிழில் இருந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.