சமீப காலத்தில் மிகவும் நெஞ்சை உலுக்கிய மரணம் நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மரணமே. இவர் பிரபல கன்னட நடிகர் ஆவார். இவர் நடிகை மேக்னா ராஜை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் 34 வயதான இவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிம்பு கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மற்றும் கிச்சா சுதீப் ஆகியோர் உடன் நடுரோட்டில் நடனமாடும் வீடியோ தற்போது சமூக இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதனை பார்க்கும் போது இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதோ அந்த வீடியோ