கொரானோ என்னும் தொற்று உலகெங்கும் வாரி மனித உயிர்களை கேன்றுவருகிறது. உலகையே ஆட்டி படைக்கிறது கொரானோ என்னும் வைரஸ். இந்நோய் சீன நாட்டில் ஆரம்பித்து தற்போது உலகெங்கும் உள்ள நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்நோய் தொற்று பரவாமல் இருக்க உலக நாடுகளும் பல முன்னெச்சிரிக்கை நடவெடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை, எனினும் இந்நோய் பரவாமல் தடுக்க பல முன்னெச்சிரிக்கை நடவெடிக்கைகளை மேற்கொள்ள அரசு மக்களுக்கு பரிந்துரை செய்து வருகிறது. இந்நிலையில் ஒருவரை ஒருவர் தொட கூடாது எனவும் சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் எனவும் அரசு தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.
இந்த ஊரடங்கு உத்தரவின் போது பிரபலங்கள் பலரும் மக்களுக்கு நிறைய உதவிகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் தனது ஆபிஸை கொரானோ பாதித்தவர்களுக்கு மருத்துவம் அளிக்கும் வார்டாக மாற்ற முன்வந்துள்ளார்.