நடிகர் சேதுராமன், இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர். இவருடன் இந்த படத்தில் பவர் ஸ்டார் மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்து இருப்பர்.
இந்த படத்திற்கு பிறகு நடிகர் சந்தனமும் சேதுராமனும் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டனர். சேதுராமன் சொந்தமாக மருத்துவமனை வைத்துள்ளார். தோல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு செய்து வந்துள்ளார்.
இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. தனது கிளினிக்கை சென்ற வருடம் தான் மேலும் இரண்டு கிளைகளை திறந்துள்ளார் சேதுராமன். அவர் இறப்பதற்கு சிலமணி நேரம் முன் தான் கொரானோ குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
மாரடைப்பு காரணமாக இறந்த இவர் தன் நண்பர் சந்தானத்துடன் எடுத்த கடைசி வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. மேலும் இது பார்ப்போரின் கண்களை கலங்க செய்கிறது.