தமிழ் சினிமாவில் நகைச்சுவை நாயகன், வில்லன் மற்றும் குணசித்திர வேடம் என பன்முகத்திறமை கொண்டவர் நடிகர் சென்ட்ராயன். இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்
நடிகர் ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து தற்போது தான் குழந்தை பிறந்துள்ளது.
சென்ராயன் நடிகர் அஜித் நடித்த மங்காத்தா படத்தில் வரும் ஒரு கெட்டப்போன்று உடை அணிந்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் . இந்த புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன. அந்த புகைப்படம் இதோ.

