90 ‘ஸ் தலைமுறையினரின் சிரிப்பிற்கு நிறைய நேரங்களில் காரணமாக இருந்தவர் நடிகர் செந்தில். இவர் கௌண்டமணியோடு செய்யும் காமெடி மிகவும் பிரபலம்.
“நான் உங்கள் காமெடி நடிகர் செந்தில் கொரானோ வைரஸ் பரவுவதால் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் கடைசியாக நான் சூர்யா தம்பியுடன் இணைந்து தான சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தேன்.”
” கூடிய விரைவில் இன்னும் பல படங்களில் நடித்து உங்களை சந்தோசம் ஆக்குவேன் என்று நம்புகிறேன். அதுவரை உங்களுடன் தொடர்பில் இருக்க ஆசை பட்டேன். எனவே தான் தற்போது ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்கி உள்ளேன்.
அனைவரின் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என குறிப்பிட்டு இருந்தது. இது குறித்து நடிகர் செந்திலிடம் விசாரித்த போது, அது நான் இல்லை ட்விட்டர் என்றால் என்னனு கூட எனக்கு தெரியாது, யாரோ ஏன் பேரை வைத்து ஏமாற்றுகிறார்கள், அது போலியானது என்று கூறியுள்ளார்.