நடிகர் செந்தில், தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவான் என்றே சொல்லலாம். இவரும் கவுண்டமணி அவர்களும் சேர்ந்து செய்த நகைச்சுவைகள் இன்றும் மக்களால் மறக்கப்படாத ஒன்று. அந்த அளவிற்கு செந்தில் அவர்கள் மக்களில் மனதில் பெரிய இடத்தை பிடித்தவர்.
சினிமா துறையில் இன்றும் எல்லோருக்கும் பிடித்த நடிகர் என்றால் கண்டிப்பாக செந்தில் அவர்களை சொல்லுவார்கள். செந்தில் அவர்களின் அக்மார்க் வாழைப்பழம் காமெடி இன்றும் மக்களால் பெரிதாக ரசிக்கப்படும் ஒன்று. இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். ஒருவர் டாக்டர் மற்றொருவர் துணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று திரு. செந்தில் அவர்கள் சமூகவலைத்தளமான ட்விட்டரில் இணைந்ததாக செய்திகள் வந்து கொண்டு இருந்தன . அது மட்டும் அல்லாமல் அவர் வெளியிட்ட பிரஸ் ரிலீஸ் ஒன்று இணையத்தில் வைரல் அந்தாளு. அந்த பிரஸ் ரிலீஸில் கொரோனா வைரஸ் தாக்குதலால் அனைவரும் வீட்டில் இருக்குமாறு கேட்டு கொள்கிறேன். மீண்டும் நிறைய படங்கள் செய்ய உள்ளேன். உங்களுடன் தொடர்பில் இருக்க ஆசைப்பட்டேன் அதனால் ட்விட்டரில் இணைத்தேன் என்று இருந்தது.
நான் எந்த ஒரு சமூக ஊடகங்களிலும் இல்லை. குறிப்பாக TWITTER மற்றும் FACEBOOK போன்றவற்றில் இல்லை. சோசியல் மீடியாவில் என் பெயரில் உள்ள அனைத்தும் போலியானது என்பதை 24x7tamil.com வழியாக தெரிவித்தார். இதோ அந்த வீடியோ.