தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கு என்று ஒரு இடம் எப்போதும் உண்டு. ஹீரோக்களுக்கு இணையான முக்கியத்துவம் வில்லன்களுக்கும் உண்டு. தமிழ் சினிமாவின் சிறந்த விளங்களில் ஒருவர் செந்தாமரை.
இவர் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மூன்று முகம் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு புகழ் நிறைய வந்தது.
புகழின் உச்சத்தில் இருக்கும் போதே இவர் உடல் நலம் சரியில்லாமல் காலமானார். இவர் மனைவி பெயர் கவுசல்யா. இவர் தற்போது நாடகங்களில் நடித்து வருகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா சீரியலில் நகைச்சுவை வில்லியாக நடித்து வருகிறார்.
இவர் ஒரு கேன்சர் நோயாளி, இருப்பினும் அதில் இருந்து முற்றிலும் மீண்டு தனியாக வசித்து வருகிறார்.












