ஒரே நேரத்தில் 17 படங்களில் நடிப்பது பற்றி சரத்குமார் நிருபர்களிடம் கூறியது தற்போது ‘கஸ்டடி’, ‘நாதா’, ‘நிறங்கள் மூன்று’, ‘போர் தொழில்’, ‘பரம்பொருள்’, ‘கிரிமினல்’, ‘ஆழி’, ‘ஹெட் லிஸ்ட்’, ‘என்கவுண்டர்’ உட்பட 13 படங்களில் நடித்த முடித்துள்ளேன். ‘பயணம்’ என்ற வெப் சீரிஸ் நடித்துள்ளேன்.

மேலும் நான்கு படங்களில் நடிக்கிறேன். எனது 150ஆவது படமான ‘ஸ்மைல் மேன்’ உருவாகிறது. இதில் விபத்தில் சிக்கி நினைவாற்றல் இழந்த போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். நான் எப்படி ஒரு கொலையாளியை கண்டுபிடிக்கிறேன் என்பது கதை.

இப்படம் தமிழிலும், மலையாளத்திலும் உருவாகிறது. ஷாம் பிரவீன் இணைந்து இயக்குகின்றனர். அடுத்து ‘பரம்பரா’ வெப்சீரிஷில் மூன்றாவது பாகத்தில் நடிக்கிறேன். அடங்காதே ‘கிடா சண்டை’, ‘டாக்ஸி’, ஆகிய படங்களிலும் நடிக்கிறேன்.

சூரிய வம்சம் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும். சூரியன் படத்தில் இரண்டாம் பாகமும் உருவாகிறது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கம் படத்திலும், சேரன் இயக்கம் வெப்தொடரிலும் நடிக்கிறேன்.