கொரானோ ஊரடங்கு காரணமாக வீட்டில் எல்லோரும் பொழுதை கழித்து வருகின்றனர். இந்நிலையில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஒரு மாதத்திற்கு மேல் மூடி உள்ளன. இதில் முடி திருத்தும் செய்யும் கடையும் அடங்கும்.
இதனால் ஒரு மாதத்திற்கு மேல் முடி ஆண்களுக்கு வளர்ந்தால் நிலைமை என்ன ஆகும், மேலும் சிலர் வீட்டிலேயே முடி திருத்தம் செய்து வருகின்றனர்.
அதுபோல பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகான். இவர் பிரபல நடிகையான கரீனா கபூரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தைமூர் என்ற மகன் உள்ளான்.
தன் மகனுக்கு முடி வளர்ந்ததை தொடர்ந்து தன் வீட்டில் இருந்தபடியே முடி திருத்தம் செய்துள்ள புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.