நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. கூலி படத்தில் ஆமீர் கான் நடித்ததை அடுத்து ஷாருக்கான் நடிக்கிறார் என்று ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள்.
ஷாருக்கான் தொடர்பான காட்சிகளை படமாக்க 5 நாட்கள் கேட்டிருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.நான் தலைவர் ரசிகன், கண்டிப்பாக படத்தில் நடிக்கிறேன். ஆனால் என்னுடைய கிங் பட ரிலீஸுக்கு பிறகு படத்தை வெளியிடுங்கள் என்று கோரிக்கை விடுத்தாராம் ஷாருக்கான்.
இந்த மாதம் ஷாருக்கான், ரஜினிகாந்த் வரும் காட்சிகளை படமாக்க திட்டமிட்டார்கள். ஆனால் தான் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடித்து வரும் கிங் படத்திற்கு முன்பு ஜெயிலர் 2 படம் ரிலீஸாகப் போவதால், சாரி! என்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம் ஷாருக்கான்










