Wednesday, September 18, 2024
-- Advertisement--

கந்தசஷ்டிகவசம்- கருப்பர் கூட்டம், யாருக்கோ.. ஏதோ.. உள்நோக்கம் இருப்பதாகவே தோன்றுகிறது- ராஜ்கிரண்.!

சமீபத்தில் இந்து மத கடவுளான முருகனின் பாடலான கந்த சஷ்டி கவசம் குறித்து அருவருக்கத்தக்க வகையில் விமர்சனம் ஒன்று யூ டி யூ ப் ல் வெளியானது. இது குறித்து மிக பெரிய சர்ச்சை கிளம்பியது. இந்த யூடியூப் சேனல் அதிபர் செந்தில் வாசன் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து தற்போது பிரபல தமிழ் நடிகர் ராஜ்கிரன் தனது முகநூலில் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது

கந்தர் சஷ்டி கவசம்
ஒவ்வொரு மனிதனுக்கும்
எந்த வகையிலேனும்
தனக்குப் பாதுகாப்பு
தேடிக் கொள்ள உரிமை இருக்கிறது
அது அவர்களது சுதந்திரம்
முருகப்பெருமானை நம்புவோருக்கு
கந்த சஷ்டி கவசம் என்பது
ஒரு பாதுகாப்பு அரண்
இதை ஆழ்ந்து படித்தால் அறிவியல்
பூர்வமான மனோதத்துவ ரீதியான
பலன்கள் இருக்கின்றன
இறைவனை நம்புவது
என்பது அவர்களது சுதந்திரம்
நம்பிக்கை கொண்டோருக்கு
நம்புதல் என்பது
அவர்களின் சுதந்திரம்
இதில் அவரவர் எல்லையோடு
அவரவர்கள் நின்று
கொள்வதுதான் மேன்மையானது
தேவையில்லாமல்
மற்றவர் எல்லைக்குள்
புகுந்து விமர்சனம் செய்வது
என்பது மிகவும் கீழ்மையானது
இந்தக் கொடிய காலகட்டத்தில்
நோயோடு நோய் பயத்தோடும்
பொருளாதார சீர்கேட்டை
உண்ண உணவின்றி
கோடிக்கணக்கான மக்கள்
தவித்துக் கொண்டிருக்கும்
சூழலில் இப்படி ஒரு
பிரச்சினைக்கும் தீ மூட்டுவதில்
யாருக்கோ
ஏதோ உள்நோக்கம்
இருப்பதாக நினைக்க
தோன்றுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles