Thursday, February 22, 2024
-- Advertisement--

தயாரிப்பாளர் வி.ஏ.துரையின் முழு மருத்துவ செலவையும் ஏற்ற நடிகர் ரஜினிகாந்த்…!!! முழு விவரம் இதோ.

தயாரிப்பாளர் வி.ஏ.துரையின் மருத்துவ செலவை நடிகர் ரஜினிகாந்த் ஏற்றுள்ளார். பிதாமகன், லூட்டி, கஜேந்திரா, என்னம்மா கண்ணு உட்பட படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. இப்போது வறுமையில் வாடுகிறார்.

சமீபத்தில் அவரது நண்பர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் சர்க்கரை நோய் அதிகம் பாதிக்கப்பட்டு அதனால் கால் எலும்பு தெரியும் அளவிற்கு புண்கள் ஏற்பட்டு கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும் நிலையில் உள்ளார். இதை எடுத்து நடிகர்கள் சூர்யா, கருணாஸ் அவருக்கு நிதியுதவி செய்தனர்.

இந்நிலையில் துரையிடம் போனில் பேசிய ரஜினி அவரது மருத்துவ செலவுகளை ஏற்றுக் கொள்வதாகவும் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய பிறகு வந்து சந்திப்பதாகவும் கூறியுள்ளார். ரஜினிக்கு நெருங்கிய வட்டாரம் இந்த தகவலை தெரிவித்தது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles