Friday, September 13, 2024
-- Advertisement--

தந்தை ரகுவரனின் நிறைவேறாத ஆசையை அவர் இறந்ததற்கு பின் நிறைவேற்றிய அவரது மகன்…!!! வீடியோ உள்ளே.

ரகுவரன் தமிழ் சினிமா இப்படி ஒரு நடிகரை தொலைத்துவிட்டோம் என்று இன்றும் கவலைப்படும் ஒரு மாபெரும் நடிகர். இவர் தமிழ்க்கு “ஏழாவது மனிதன்” என்ற படத்தில் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் தமிழில் நிறைய படங்களில் நடித்து மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார். இன்றும் ரகுவரனின் வில்லத்தனமான நடிப்பிற்கு நிகரான வில்லன் நடிகர்கள் யாரும் இல்லை என்பதே உண்மை. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து மாபெரும் ஹிட் ஆன “பாட்ஷா” படத்தில் ஆண்டனி கதாபத்திரத்தில் அவர் நடித்து மிரட்டியது மறக்க முடியாத ஒன்று. அதன் பின் சில வருடங்களுக்கு பிறகு நடித்த “முதல்வன்” படத்தில் அவருடைய நடிப்பு வேற லெவல் என்றே சொல்லலாம்.

வில்லன் மற்றும் அல்லாமல் சில படங்களில் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்து எடுத்து நடித்தார். திருமலை படத்தில் சாதுவாக நடித்து இருந்தார். விஜயின் “சச்சின்” படத்தில் விஜயின் தந்தையாக நடித்து இருந்தார். “யாரடி நீ மோகினி” படத்தில் தனுஷின் தந்தையாக நடித்து இருந்தார். இப்படி மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்த ரகுவரன் 2008 ஆம் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இவர் நடிகை ரோகிணியை திருமணம் செய்து ஒரு சில பிரச்சனைகளால் பிரிந்து இருந்தார். ரகுவரனுக்கு ரிஷி வரன் என்ற மகனும் உள்ளார். ரகுவரன் சினிமாவில் நுழைந்ததே இசை அமைப்பாளர் ஆக வேண்டும் என்ற ஆசையில் தான் வந்து இருக்கிறார். இசை மீது கொண்ட பிரியத்தால் இளையராஜா இசைக்குழுவில் கிட்டார் வசித்து இருக்கிறார். ரகுவரன் அவர்கள் இசையமைத்து பாடிய பாடல்களில் சிலவற்றை “raguvaran musical journey” என்று அந்த ஆல்பத்தை ரஜினிகாந்த் அவர்கள் கையால் வெளியிட்டார் அவரது மகன்.

இதோ அவர் இசை அமைத்த பாடல்கள்

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles