டான்ஸராக தன் சினிமா பயணத்தை தொடர்ந்த ராகவா லாரன்ஸ் பல படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அதன்பிறகு நடிகர், இயக்குனர், தற்போது தயாரிப்பாளர் என சினிமாவில் தனது பல ரூபங்களை காட்டி வருகிறார். முனி படத்தை இவர் இயக்கி நடித்த தொடர்ந்து நல்ல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து வருகின்றன வந்த படங்கள் வசூலிலும் பெரிய சாதனை புரிந்து வருகிறது.
இந்நிலையில் லாரன்ஸ் சினிமாவில் பெரிய நட்சத்திரமாக ஜொலித்தாலும் சமூக சேவையில் மிகுந்த ஈடுபாடு இருந்து வருகிறார். இவர் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி, மருத்துவம் போன்ற பல வசதிகளை தொண்டு நிறுவனத்தின் பெயரில் செய்து வருகிறார்.
தற்போது கொரோனாவால் பலர் வறுமையில் வாடும் சமயத்திலும் அவர்களுக்கு தனது தொண்டு நிறுவனத்தின் சார்பாக பல உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் அசோக் நகரில் உள்ள அவரது ட்ரஸ்டில் 20 பேருக்கு கொரானோ உறுதி செய்யப்பட்டுள்ளது .அந்த டிரஸ்ட்டில் இருக்கும் 15 மாணவ மாணவிகளுக்கும் 3 பணியாளர்களுக்கும் இரண்டு சமையல்காரர்களுக்கு தொற்று உள்ளது.இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் இந்த செய்தி மிகுந்த சோகத்தை அதிர்ச்சியையும் அவருக்கு ஏற்படுத்தி உள்ளது.