தமிழ் சினிமாவில் தற்போது பெரிய இயக்குனர்களின் ராகவா லாரன்ஸ் ஒருவர். இவர் இயக்குனர் ஷங்கருக்கு இணையாக பெரிய பட்ஜெட் படங்களை தற்போது இயக்கி தயாரித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான காஞ்சனா படமும் நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. சினிமாவில் இவர் இயக்குனராகவும், நடிகராகவும் ,தயாரிப்பாளராகவும், நடன இயக்குனராகவும் என பல முகங்களை கொண்டிருந்தாலும் இயல்பான வாழ்க்கையில் இவர் மிகவும் இயல்பான மனிதர்.

தன் சிறு வயதில் இருந்தே தன்னால் முடிந்த உதவிகளை சிறுவர்களுக்கும், ஏழைகளுக்கும் செய்துவருகிறார். தானாகவே சொந்தமாக தொண்டு நிறுவனத்தையும் இவர் நடத்தி வருகிறார். மேலும் யார்யார் வறுமையில் வாடுகிறார்கள் அவர்களுக்கு தேடி தேடி போய் தன் உதவிகளை செய்து வரும் மிகப் பெரிய குணத்தை உடையவர்.

இந்நிலையில் இவரது ரசிகரான சிறுகுழந்தை ஒருவர் இவருடைய புகைப்படத்திற்கு முத்தமிடும் புகைப்படம் ஒன்றை ரசிகர்கள் ராகவா லாரன்சுக்கு அனுப்பியுள்ளனர். அதைப்பார்த்த ராகவராலன்ஸ் இந்த புகைப்படத்தை என்னிடம் கொண்டு சேர்த்த எனது ரசிகர் மன்றம் நண்பர்களான சுகுமார் மற்றும் வெங்கட்டுக்கு எனது நன்றி . இந்த சிறுவனை பார்க்கும் பொழுது என் சிறுவயது ஞாபகம் எனக்கு ஞாபகம் வருகிறது, கூடிய சீக்கிரம் இந்த சிறுவனை நான் சந்திப்பேன், அவனுக்கு நல்ல சிறப்புகள் செய்வேன் என்று கூறியுள்ளார்.










