தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளிலும் வெளியான படம் பாகுபலி. இந்த படத்தில் பிரபாஸ் ,ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர்,சத்யராஜ் உட்பட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நான் நடித்து இருந்தனர். வரலாற்று சரித்திர கதையை மையமாக கொண்டு எடுத்த இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தில் வில்லனாக நடித்து அளவில் இந்திய பிரபலம் அடைந்தார் ராணா.
தமிழில் அஜீத் நடித்த ஆரம்பம் படத்தில் அஜித்திற்கு தோழனாக நடித்து தமிழ் மக்களிடையே நல்லதொரு இடத்தைப் பிடித்திருந்தார். மேலும் தமிழில் ஒரு சில படங்களில் இவர் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் இவர் சிலருடன் சில கிசுகிசுக்களில் அடிபட்டார் .மேலும் இவருக்கு யாரோடு எப்போது திருமணமாகும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். பல வருடங்களாக முரட்டு சிங்கிள் ஆக இருந்த இவர் தற்போது யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் மீஹிகா என்பவரை காதலித்துள்ளார் .இவர்கள் நிச்சயதார்த்தம் சமீபத்தில் தான் நடைபெற்றது.
அது குறித்து மனம் திறந்துள்ளார் ராணா, தற்போது தன் காதல் குறித்து சிலர் விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.அதில் எங்களுடைய குடும்பமும் மிஹிகாவின் குடும்பமும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஐதராபாத்தில் வளர்ந்தவர்கள் என்பதால் எங்களுக்கு பொதுவான நண்பர்கள் அதிகம். நிறைய நேரம் கிடைத்தது திருமணத்தை பற்றி யோசித்தேன். அதனால் தான் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தேன் .எப்போதும் சினிமா துறையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வது பற்றி யோசிப்பது கிடையாது மிகவும் யோசனை செய்து எனது துணையை பார்த்துவிட்டேன், அவ்வளவு தான். காதலில் விழுந்த கதையை இவ்வாறு கூறினார்.