தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். இவர் கடந்த மார்ச் மாதம் ஆடுஜீவிதம் என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக ஜோர்டான் நாட்டிற்கு சென்றனர்.
பிருத்விராஜுடன் 58 பேர் கொண்ட படக்குழு ஜோட்ரான் நாட்டிற்கு கடந்த மார்ச் மாதம் சென்றது. அங்கு வாடி ரம் என்ற பாலைவன பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. அந்தச் சமயத்தில்தான் கொரனோ தொற்று உலக நாடுகள் அனைத்திலும் வேகமாக பரவியது. இதனால் அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதனால் தனது சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமலும் படப்பிடிப்பை மீண்டும் தொடர முடியாமலும் பிரிதிவிராஜின் படக்குழு மிகவும் தவித்தது.
அந்த 58 பேரையும் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசும் மாநில அரசும் கைவிரித்தது. சமீபத்தில் ஊரடங்கு தளர்த்தப் பட்டதால் அந்த 58 பேர் கொண்ட குழு கடந்த சில நாட்களுக்கு முன் தான் கொச்சி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் 58 பேரும் 14 நாட்கள் தனிமை படுத்த பட்ட னர்.
அவர்களுக்குக் தொற்று இருப்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் நடிகர் பிரித்விராஜ் தொற்று இல்லை என்பது உறுதி செய்த பிறகு அவர் வீட்டில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். தற்போது அவருக்கு கொரனோ சோதனை மீண்டும் செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இல்லை என்பது முற்றிலுமாக உறுதி செய்யப்பட்டது.
மீண்டும் தன் மனைவி மற்றும் மகனுடன் இணைந்து அவர் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இதற்கு முன்னணி நடிகர்களான துல்கர் சல்மான், டோவினோ தாமஸ் போன்றோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பாதுகாப்பாக எப்பொழுதும் இருங்கள் என்றும் கூறிவருகின்றனர்.