தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் 90களில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். நடிகர் அஜித், விஜய்க்கு போட்டியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
பிரசாந்த் கடந்த 2005 ஆம் ஆண்டு தொழிலதிபரின் மகளான கிரகலட்சுமி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அவர்களின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் கிரகலட்சுமி பிரசாந்த் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டது.
இதன் காரணமாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். ஆகையால் திருமண வாழ்க்கையில் உடைந்து போன பிரசாந்த் சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார்.
பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கினாலும் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தார். தற்போது பிரசாந்த் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது தன்னுடைய அப்பாவின் இயக்கத்தில் அந்தகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதோட சமீப காலமாக பிரஷாந்துக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளது என செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தற்போது தியாகராஜா படித்த பேட்டி ஒன்று நடிகர் பிரசாந்துக்கு எப்போது திருமணம் என கேட்கப்பட்டது. அதற்கு அந்தகன் திரைப்படம் வெளியான அடுத்த மாதமே திருமணம் என தெரிவித்துள்ளார்.