தற்பொழுது நாட்டில் பல பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கும் பொழுது பல பேருக்கு எந்த விஷயத்தில் மூக்கை நுழைப்பது என்று தெரியவில்லை. ஏதாவது ஒரு பிரச்சினையை கைதூக்கி அதை குறித்து சண்டை போட ஆரம்பித்து விடுகிறார்கள்.
இந்நிலையில் தற்பொழுது மதப் பிரச்சினை ஒன்று வந்துள்ளது. சமீபகாலமாக கந்த சஷ்டி கவசம் பற்றி அவதூறு கிளம்பி உள்ளது. இது குறித்து தமிழில் பிரபல நடிகரான பிரசன்னா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு பெரியது, அதை மதிக்க தெரியாத போக்கிரிகள் யாராயினும் எவருக்கு எதிராகவும் தண்டிக்கப்பட்டால் மட்டுமே மதச்சார்பற்ற நாடாக இருக்க முடியும், மதச்சார்பின்மை நம்பிக்கை கொள்ளச் செய்வது இன்றளவில் மதநம்பிக்கையினும் அதிக முக்கியம்” என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்து மற்றொரு தமிழ் நடிகரான நட்ராஜ் சுப்பிரமணி பதிவிட்டுள்ளது என்னவெனில், “சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் கிடையாது, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் கிடையாது, சரவணபவாய நம” என்று பதிவிட்டுள்ளார். மேலும் பல பிரபலங்களும் இது குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.